ஒரே வாரத்தில் உங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா
உடல் எடை அதிகரிப்பு
தற்போதைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் ஒரே கவலை உடல் ஒல்லியாக இருப்பதுதான். இதற்கு நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத தான் காரணமாகும் மற்றும் அவர்களது உடம்பில் ஏற்படும்ஜீன் மாற்றங்களாலும் அவர்களுக்கு உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்பொழுதும் அதிகமானோர் உடல் எடை அதிகரிப்பது தான் அதிக பணத்தையும் நேரத்தை செலவழிக்கின்றனர் .உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று பல மருந்துகளை அவர்கள் சாப்பிட்டு வருகிறார்கள் சில மருந்துகளால் அவர்களுக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன ஆகையால் இயற்கையாகவே உடல் எடையை அதிகரிப்பது மிக மிக நல்லது.
உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்
முட்டை
முட்டையில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது உங்களுக்கு உடல் எடை மிக விரைவில் அதிகரிக்க வேண்டுமென்றால் நீங்கள் முட்டையை சாப்பிடுவது நல்லது மஞ்சள் கருவில் தான் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது எனவே கருவை சாப்பிடுவது மறந்துவிடாதீர்கள் நீங்கள் ஒரு நாளைக்கு எட்டு முட்டையாவது குறைந்தபட்சம் சாப்பிட வேண்டும் இல்லை எனில் மூன்று வேளையாவது நீங்கள் முட்டை சாப்பிட வேண்டும் இவ்வாறு நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களது உடல் எடை அதிகரிக்கும் முட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது மற்றும் அமினோ அமிலங்கள் அதிகமாக காணப்படுகிறது.தினமும் நான்கு முட்டிக்குமேல் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
இறால்
இறாலில் அதிகபட்சமான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது கடல் மீன்களில் கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த இறால் மூலமாகவும் நம் உடலுக்கு கிடைக்கிறது. இறால் நன்கு சுத்தம் செய்த பின்பு சாப்பிடுவது நல்லது முடிந்தவரை தினமும் மதிய வேளையில் ஒரு சமைத்து சாப்பிடுவதை விரும்புங்கள் ஏனெனில் இறாலில் தான் நம் உடலுக்கு தேவையான அதிக அளவு கலோரிகள் உள்ளது அதை உண்பதால் நாம் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்கவும் உதவுகிறது . தினமும் இரண்டு வேளை உணவில் இதனை சேர்த்து சாப்பிடுவது நல்லது.ஒல்லியாக உள்ள நீங்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டும் .
பீன்ஸ்
நம்மில் பலர் பீன்சை சாப்பிடாமல் ஒதுக்கி விடுகின்றனர் ஆனால் அவர்களுக்கு பீன்ஸில் உள்ளது மருத்துவ குணங்களைப் பற்றி தெரியவில்லை .பீன்ஸை சாப்பிடுவதனால் மாமிசத்துக்கு நிகரான ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றன .அசைவம் சாப்பிட விரும்பாதவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமென்றால் பீன்சை சாப்பிட்டு வரலாம் ஏனெனில் பீன்ஸில் உடல் எடையை மிக விரைவில் அதிகரிக்க வழி செய்கிறது .
பீன்ஸில்மட்டுமே 300 கலோரிகள் உள்ளது அதனால் பீன்சை சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான கலோரிகள் கிடைக்கின்றன .தினமும் உணவில் கீரையை சேர்த்து சாப்பிட வேண்டும் இது எடையைஒரே வாரத்தில் அதிகரிக்க உதவுகிறது.
சேனைக்கிழங்கு
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சேனைக்கிழங்கு என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால் முந்தைய காலகட்டத்தில் சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உண்பதால் தான் நம் முன்னோர்கள் வலுவுடனும் திடகாத்திரமான உடல் அமைப்புகளுடன் காணப்பட்டனர் சேனைக்கிழங்கில் அதிக அளவு ஸ்டார்ச் சத்து உள்ளது. எனவே இதை சாப்பிட்டு வந்தால் ஸ்டார்ச் சத்துதான் உடம்பில் உள்ள தசைகளை விரிவடையச் செய்யும் அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்தவும் இந்த சேனைக் கிழங்குகள் பயன்படுகிறது இந்த சேனைக்கிழங்கை சாப்பிடுவதனால் நம் உடலுக்கு தினமும் 350 கலோரி ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன
இதனால் ஒரே வாரத்தில் மிக வேகமாக உடல் எடையை அதிகரிக்க முடியும் .
உடல் எடையை வேகமாக அதிகரிக்க இவற்றை சாப்பிடவும்
உருளைக்கிழங்கில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி அதிகம் உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.மற்றும் வாழைப்பழத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது.இது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.தினமும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வாழைப் பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.மற்றும் பாதாம் பருப்பை ஒரு கைப்பிடி அளவு தினமும் சாப்பிட வேண்டும்.
இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.பாதாம் பருப்பு நரம்பு பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
உடல் எடை அதிகரிப்பதில் உலர் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டு வருவது உடலுக்கு 99 கலோரிகள் கிடைக்கும்.
இவ்வாறு செய்து வந்தால் ஒரே வாரத்தில் உடல் எடையை அதிகரிக்க முடியும்.
ஒரே வாரத்தில் உங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா
Reviewed by awareness tamilan
on
August 26, 2018
Rating:

No comments