ஒரே வாரத்தில் உங்கள் முகத்தை வெண்மையாக மாற்ற வேண்டுமா ?
முக வெண்மை
இந்த காலகட்டத்தில் அவர் அவர் முகத்தை வெண்மையாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அதற்காக அவர்கள் அதிக அளவு பணத்தை செலவு செய்தும் தங்களது உடலை வருத்திக்கொண்டு இருக்கிறார்கள் முகம் மென்மையாக இருந்தால் தான் அடுத்தவர்களுக்கு கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்கள் இதற்காகவே அவர்கள் அதிக அளவு பணத்தை செலவு செய்து வருகிறார்கள் ஆனால் எங்கள் இயற்கை முறையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு உங்களின் முகத்தின் நிறத்தை மாற்ற முடியும் .
முகத்தை வெள்ளையாக மாற்ற உதவும் சில உணவு வகைகள்
மோர் :
மோரில் அதிக அளவு நன்மைகள் உள்ளது தினமும் காலையில் வெறும் வயிற்றில் மோர் குடிப்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. மோரில் உள்ள அமிலம் உடலில் உள்ள இரத்த அணுக்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. தினமும் உணவில் மோர் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகமிக நன்மையை அளிக்கிறது. மோரில் சிறிதளவு உப்பை சேர்த்து மதிய வேளையில் குடித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்ச்சியை தருகிறது. குளிப்பதற்கு முன் மோரை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.இதனால் முகம் வெண்மையாக மாறும்.
எலுமிச்சை பழம் :
எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் நாம் வெண்மையாக மாற உதவுகிறது .தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றை சாப்பிடுவது நல்லது மதிய நேரங்களில் எலுமிச்சை சாற்றை பிழிந்து ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும் அவ்வாறு குடிப்பதனால் உடலிலுள்ள திசுக்கள் புத்துணர்ச்சி அடையும். எலுமிச்சை உணவுடனும் சேர்த்து சாப்பிடுவது நல்லது எலுமிச்சம் பழச் சாற்றை தேனுடன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.
இவ்வாறு செய்தால் முகம் வெள்ளை நிறத்துக்கு மாறத் தொடங்கும்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது இது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இது தருகிறது .தினமும் உணவில் உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் உருளைக்கிழங்கை வறுத்தும் சாப்பிடலாம் உருளைக்கிழங்கை அரைத்து எலுமிச்சைச் சாறுடன் கலந்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை போகும். இதனால் முகம் வெள்ளையாக மாறும்.
வெள்ளரிப்பிஞ்சு:
வெள்ளரிப் பிஞ்சில் உள்ள நீர் சத்து தான் நாம் வெண்மையாக மாற உதவுகிறது .தினமும் வெள்ளரிப்பிஞ்சு சாப்பிட வேண்டும் இவ்வாறு சாப்பிடுவதனால் முகச் சுருக்கம் முகத்தில் ஏற்படும் வெடிப்பு போன்றவை நீங்கும். வெள்ளரிப்பிஞ்சு சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு மேல் வைத்து முகத்தை கழுவ வேண்டும் .இதனால் முகம் மென்மையாக மாறும்.
தயிர்:
தயிரில் உள்ள புளிப்புத்தன்மை நம் உடலுக்கு புத்துணர்ச்சியையும் ரத்த அணுக்களை பாதுகாக்கவும் உதவுகிறது .தினமும் காலையில் அருந்துவது நல்லது உணவிலும் சேர்த்து சாப்பிடுவது மிக மிக நல்லது .மதிய வேளையில் தயிரை குடிப்பதனால் உடலில் உள்ள சூடு நீங்கும் .அல்லது பப்பாளி பழத்தை அரைத்து அதனுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகம் மிகவும் மென்மையாக மாறும்.
உடற்பயிற்சி:
உடல் சோர்ந்த நிலையில் காணப்படுவதற்கு காரணம் நாம் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதுதான் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் பயிற்சி செய்வதனால் உடலில் உள்ள அனைத்து தசைகளும் வலுவடையும் .உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக அமையும். இதனால் முகம் பொலிவுடன் காணப்படும் .
ஒரே வாரத்தில் உங்கள் முகத்தை வெண்மையாக மாற்ற வேண்டுமா ?
Reviewed by awareness tamilan
on
August 23, 2018
Rating:

No comments