வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக வாழ்வதற்கு உதவி செய்யும் சில விஷயங்கள்
வாழ்க்கையே மிகவும் சந்தோசமாக வாழ தேவைப்படும் சில விஷயங்கள்
ஒருவருடைய வயது அறிவு கல்வி செல்வ செழிப்பு மற்றும் இறப்பு ஆகிய அனைத்தும் அவன் தன்னுடைய தாயின் கருவறையில் இருக்கும் போதே முடிவு செய்யப்படுகிறது
அவனுடைய விதிப்படியே அனைத்தும் நடக்கும் ஆகையால் ஒருவன் தன் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் எதிர்காலம் என்பது கேள்விக்குறியான ஒன்றாகும் ஆகையால் நிகழ்காலத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் அன்பாகவும் வாழ வேண்டும்.
மனித உடலானது அழிந்து போகக் கூடிய ஒன்றாகும் மற்றும் ஒருவன் வாழும் வளமான வாழ்வும் நிலையில்லாத ஒன்றாகும் ஆகையால் உலகின் அற்புதமான விஷயங்களுக்காக நம்முடைய நேரத்தை வீணாக்கக்கூடாது உங்களுக்கு தேவையான செயலை நீங்கள் செய்ய வேண்டும்
எதிர்பாராத துன்பமோ அல்லது ஆபத்து வரும்போது அதனை எதிர்கொள்ள தனது பயத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் அப்போதுதான் அந்த நிலையை வெற்றிகரமாக கடந்து வர முடியும்இப்படி நீங்கள் பயத்துடன் இருந்தால் அந்த நிலையை விட்டு நீங்கள் வெளியே வரமுடியாது.
இந்த உலகில் ஒருவர் பணத்தை மட்டுமே சேர்ப்பதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொண்டு இருக்கிறார் என்றால் அவர் அந்த பணத்தை வைத்துக்கொண்டு வாழலாம் ஆனால் சந்தோஷமாக வாழமுடியும் என்பது சந்தேகம்தான்
ஏனென்றால் அனைவருடனும் சேர்ந்து வாழ்வது நம் மனதுக்கு சந்தோஷத்தை தரும் அனைவருக்கும் உதவும் தன்மையும் நமக்கு இருக்க வேண்டும் இவ்வாறு அனைவருக்கும் உதவியை நாம் வாழ்ந்தால் நம் வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக வாழ்வதற்கு உதவி செய்யும் சில விஷயங்கள்
Reviewed by awareness tamilan
on
October 15, 2018
Rating:
No comments