பாதாமி பழம் நற்குணங்கள்
பாதாமி பழம் நற்குணங்கள்
இந்த பாதாமி பழம் அதிசய சக்தி நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் என்றும் அழைப்பார்கள். இந்தப் பழம் பொன்னிறமான மேல்தோலையும் ஒருவிதமான புளிப்பு சுவையும் கொண்டுள்ளது .இந்த பழம் எண்ணற்ற சத்துக்களையும் கொண்டுள்ளது அதுமட்டுமல்லாமல் இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. நற்குணங்கள் என்னவென்றால் பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும் குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பயன்களாகும்.
இந்தப் பழம் நோய்களைத் தீர்க்கும் குணமுடையது என்னென்ன நோய்கள் என்று பார்த்தால் இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் பல நோய்களை குணம் அடைய செய்கிறது என்ன நோய்கள் என்றால் ஆஸ்துமா மார்புசளி காசநோய் மற்றும் ரத்தசோகை ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்டது. இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்குகிறது இந்த பழம் விட்டமின் ஏ கொண்டதால் முகப்பருவை நீக்குவதிலும் தோல் தொடர்பான நோய்களையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது . பாதாமி பழம் விட்டமின் சி என்றும் சக்தியை கொண்டு உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
பாதாமி பழம் மிக மிக சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் என்றும் அழைக்கப்படுவதால் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றமானது. இருதய நோய் சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சக்தி அடங்கிய. இந்த பழம் நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம் பின்னர் அதை ஒரு பாட்டிலில் எடுத்து கொண்டு ஓட்ஸ் சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கொட்டியதும் தீயை அணைத்து ஆறவிடவும் .இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
பாதாமி பழம் நற்குணங்கள்
Reviewed by awareness tamilan
on
September 21, 2018
Rating:
No comments