கருணாஸ் MLA பதவியில் இருந்து நீக்கம் ? KARUNAS MLA
கருணாஸின் எம்எல்ஏ பதவி பறிப்பு
திரைப்படங்களில் பேசுவதுபோல் மேடையில் பேசியதால் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும் நிலைக்கு சென்றது .சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினால் கைது செய்யப்பட்ட நடிகர் கருணாஸ் மேடையில் முதலமைச்சர் மற்றும் ஜாதியை பற்றி பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு அவர் வேலூர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .அவரது எம்எல்ஏ பதவி விரைவில் பறிபோகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இவர் அதிமுக கட்சியில் எம்எல்ஏவாக இறுந்தவர் இவர் சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மற்றும் காவல் துறையினரை அவதூறாக பேசியதற்கும் மற்றும் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு எம்எல்ஏ இவ்வாறு இருக்க வேண்டும் என பல விதிமுறைகள் உள்ளது ஆனால் காரணம் அந்த விதிமுறைகளை மீறி நடந்து கொண்டுள்ளார் எனவே அவரது பதவியை பறிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் வந்துள்ளது.
இவர் மீதான புகாரை சட்டசபை உரிமை குழுவுக்கு அனுப்பப்பட்டு அங்கே அளிக்கப்படும் பரிந்துரையின் பேரில் அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்படும் என மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகரும் மற்றும் எம்எல்ஏவுமான கருணாஸ் ஏன் இன்னும் எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கப்பட வில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் மீதான புகாருக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. எனவே எம் எல் ஏ கருணாஸின் பதவி விரைவில் பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாஸ் MLA பதவியில் இருந்து நீக்கம் ? KARUNAS MLA
Reviewed by awareness tamilan
on
September 25, 2018
Rating:

No comments