நீங்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் தினமும் இந்த உணவு வகைகளை சாப்பிடுங்கள்


நோய் நொடி இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

பருத்திப்பால்
 இரவு தூங்குவதற்கு முன் பருத்தி விதைகளை தேவையான அளவு ஊற வைத்து காலையில் அதில் இருந்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் பசும்பால் கலந்து குடிக்கலாம் இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

பழைய சோறு
பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது பழைய சோற்றில் வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகம் காணப்படுகிறது மேலும் பழைய சோறு குளிர்ச்சியை அதிக அளவில் நம் உடலுக்கு தருகிறது மற்றும் சைனஸ் போன்ற தொந்தரவுகள் உள்ளவர்களுக்கு பழைய சோறு சாப்பிடுவது தீர்வு கிடைக்கும்.

பூண்டு கஞ்சி 
தேவையான அளவு பூண்டு மற்றும் அதனுடன் சாரணை வேர் சுக்கு முருங்கை இலை புழுங்கல் அரிசி மற்றும் பசும்பால் ஆகியவற்றை சேர்த்து கஞ்சி காய்ச்சி வாரம் ஒரு முறை குடித்து வர வேண்டும் இதனால் வாயு தொல்லைகள் நீங்கும் மற்றும் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.
வெந்தயம்
 வெந்தயத்தை ஊற வைத்து தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வரலாம் இதனை குடிப்பதால் நம் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இஞ்சி தேன்
 இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்து அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வரலாம் இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
நீங்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் தினமும் இந்த உணவு வகைகளை சாப்பிடுங்கள் நீங்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் தினமும் இந்த உணவு வகைகளை சாப்பிடுங்கள் Reviewed by awareness tamilan on October 07, 2018 Rating: 5

No comments