உங்களது ஆயுளை அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் இதனை தினமும் செய்து வர வேண்டும்
ஆயுளை அதிகரிக்க உதவும் சில இயற்கை வைத்தியங்கள்
பூண்டை உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிடுவது நல்லது இது bp பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது .
வெள்ளரிக்காய்
வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து அதன் சாறைப் பிழிந்து தினமும் குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதைகள் குறையும் இதனால் உடல் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.
வெந்தயம்
வெந்தயம் மற்றும் சுண்டைக்காய் வற்றல் மிளகு ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து அதை வறுத்து பொடியாக செய்து கொள்ளவும் இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
வாழைத்தண்டு
வாழைத்தண்டு சாறு மற்றும் பூண்டு சாறு அருகம்புல் சாறு இம்மூன்றில் சம அளவில் எடுத்து கலந்து கொள்ளவும் இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும் மற்றும் உங்கள் உடல் மிகவும் பொலிவுடன் காணப்படும்.
வல்லாரை கீரை
வல்லாரை கீரையை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்துக்களும் உடனடியாகக் குறையும்.
உங்களது ஆயுளை அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் இதனை தினமும் செய்து வர வேண்டும்
Reviewed by awareness tamilan
on
October 07, 2018
Rating:

No comments