பொதுக்கூட்டதில் கோபம் அடைந்த தம்பிதுரை , THAMBIDHURAI
பொதுக்கூட்டத்தில் பேசிய தம்பிதுரை கோபமடைந்தார்
கரூர் மாவட்டத்தில் 80 அடி சாலையில் அதிமுக சார்பில் முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காளியப்பன் சங்கரதாஸ் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது மேடையில் பேசுவதற்காக தம்பிதுரையை அழைத்தனர் அப்பொழுது அங்கே அமர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் பாதிப்பேர் எழுந்து வீட்டுக்கு செல்ல தொடங்கினர்.
அதை பார்த்த தம்பிதுரை மிகுந்த கோபமடைந்தார் அப்போது அவர் அங்கே கலைந்து சென்று கொண்டிருந்த கூட்டத்தை பார்த்து அவர்கள் போகட்டும் அவர்களுக்கு நிறைய வேலை இருக்கும் நான் யாரையும் கட்டாயப்படுத்தி இங்கே இருங்கள் என்று சொல்லவில்லை எங்களுக்கு நிர்வாகிகளும் மீடியாக்களும் போதும் என்றார் தம்பிதுரை.
அப்போதும் பொதுமக்கள் அதைப் பொருட்படுத்தாமல் அந்த கூட்டத்தை விட்டு கலைந்து சென்றனர் தம்பிதுரை தொடர்ந்து பேசுகையில் வாஜ்பாய் அரசில் நாங்கள் இருந்த போது காவிரிபிரச்சனைக்காக எங்கள் பதவியை ராஜினாமா செய்தோம் என கூறினார் .
பொதுக்கூட்டதில் கோபம் அடைந்த தம்பிதுரை , THAMBIDHURAI
Reviewed by awareness tamilan
on
September 26, 2018
Rating:

No comments