காவல்துறை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்


முதுகுளத்தூர் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்

வெள்ளை துரை என்பவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வசித்து வருகிறார் கடந்த 24 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரனின் கூட்டாளிகள் 10 பேர் வரை வழிமறித்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவற்றை அடித்துள்ளனர் இதனால் வெள்ளைத்துரை போலீசில் புகார் செய்தார் .

அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உதயசூரியனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் டிஎஸ்பியாக பணிபுரிந்து வருகிறார்.

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு அனுப்பப்பட்ட விசாரணை சம்மனை பெற்றுக் கொண்டுள்ளார் ஆனால் இம்முறை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை இதனால் இரண்டாவது கூடுதல் நீதிபதி கௌதமன் டிஎஸ்பி பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். 
காவல்துறை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் காவல்துறை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் Reviewed by awareness tamilan on September 26, 2018 Rating: 5

No comments