இந்த சாக்லேட் சாப்பிட்டால் நல்லது தெரியுமா?




இந்த சாக்லேட் சாப்பிட்டால் நல்லது தெரியுமா?

எல்லாருக்கும் மிகப் பிடித்தமான உணவு இந்த சாக்லேட் இருக்கிறது மிக முக்கியமாக குழந்தைகளுக்கு  பிடித்த உணவாக இருக்கிறது. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள இந்த இனிப்பு பொருள் சாக்லேட் பயன்படுகின்றன. இதை எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்னவென்று பார்ப்போம். 

இந்த சாக்லேட் சாப்பிடுவதால் இதயம் நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம் அதுமட்டுமல்லாமல் இந்த சாக்லேட் 50 சதவீதம் மாரடைப்பை தடுகிறது இதயநோயை 10 சதவீதமும் குறைகிறதாம். அதனால தினமும் ஒரு துண்டு சாக்லேட் சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்த சாக்லேட்டில் உள்ள வேதிப்பொருள் ரத்தக் குழாயில் ரத்தம் ஓடுவதற்கு மிக முக்கியமாக பயன்படுகிறது மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்கிறது. 

எல்லா ஹார்மோன்களை சரியான அளவில் வைத்துக் கொள்ளும். கொக்கோ விதையில் இருந்துதான் இந்த சாக்லேட் செய்யப்படுகிறது இதில் மிகவும் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது அது மட்டுமில்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுவதற்கு இது மிகவும் முக்கியமாக செயல்படுகிறது. உடலில் சுறுசுறுப்பைஅதிகரிக்க செய்கிறது அதனால் சாக்லேட் தினமும் ஒன்று எடுத்துக்கொள்ளலாம் பயம் எதுவும் இல்லை ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும். 

மேலும் சாக்லேட் வாங்கும் பொழுது 60 சதவீதம் கொக்கோஅதிகமாக உள்ளதா என்று சரிபார்த்து சாக்லேட் வாங்க வேண்டும். இதை சாப்பிடுவது நாள்  மனநிலையை மேம்படுத்த முடியும் மன அழுத்தம் இருப்பவர்கள் 1 துண்டு சாக்லேட் சாப்பிடுவதினால் மன அழுத்தம் குறையும் .

இந்தச் சாக்லேட்டை சாப்பிட்ட உடன் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குள் ரத்த  ஓட்டத்தை மேம்படுத்தி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் இந்த சாக்லேட் சாப்பிடுவதினால் பக்க வாதம் போன்ற நோய்களை 17% குறைக்கலாம் தினமும். சாப்பிட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம். குழந்தைகளையும் சாக்லேட் களையும் பிரிக்கவே முடியாது தினமும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் 3 வயசு குறைந்த குழந்தைகளுக்கு இந்த சாக்லேட் சாப்பிட அனுமதிக்க கூடாது
இந்த சாக்லேட் சாப்பிட்டால் நல்லது தெரியுமா? இந்த சாக்லேட் சாப்பிட்டால் நல்லது தெரியுமா? Reviewed by awareness tamilan on September 27, 2018 Rating: 5

No comments