கோழி சாப்ஸ் செய்யும் முறை

கோழி சாப்ஸ்


கோழி சாப்ஸ் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்

கோழி ஒரு கிலோ, பச்சை மிளகாய் 10 இஞ்சி இரண்டு அங்குலம், பெரிய மிளகாய் ஒன்று, முட்டை 3 ,உப்பு தேவையான அளவு எடுத்து கொள்ளவும்.

 கோழி சாப்ஸ் செய்யும் முறை

 ஒரு கிலோ கோழியை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் பின்பு இரண்டு அங்குலம் இஞ்சி 10 பச்சை மிளகாய்  ஒரு பெரிய வெங்காயம் இவற்றை அனைத்தையும் அரைத்து கொள்ள வேண்டும்.

 கோழிக்கறி துண்டுகளுடன் அரைத்த மசாலா தேவையான உப்பு சேர்த்து பிசிறி வைக்க வேண்டும் பிரஷர் குக்கரில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதன் மீது பிசிறி வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளை உள்ள பாத்திரத்தை வைத்து மூடி குக்கரின் மூடியை மூடவும்.

 மூன்று முட்டைகளை தேவையான உப்பு கலந்து நன்கு நுரைக்க அடித்து கொள்ளவும் வாணலில் 100 கிராம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோழிக்கறி துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து வைத்துள்ள முட்டை கலவையில் கலந்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் பொரித்து எடுத்த சிக்கன் சாப்ஸை அனைவருக்கும் பரிமாறவும் 
கோழி சாப்ஸ் செய்யும் முறை கோழி சாப்ஸ் செய்யும் முறை Reviewed by awareness tamilan on October 01, 2018 Rating: 5

No comments